Menu Close

2019ம் ஆண்டின் சூப்பர் மூன் இன்று காணலாம்

Super Snow Moon

2019ம் ஆண்டின் மிகவும் பெரிதான மற்றும் வெளிச்சமுடைய சூப்பர் ஸ்நொவ் மூன் (நிலாவை) இன்று (19 பிப்ரவரி) வானில் தென்படுகிறது.

Read this news in English: See the 2019’s Super Snow Moon Today

இன்று அமெரிக்காவில் தென்படும் நிலாவை ‘சூப்பர் ஸ்நொவ் மூன்’ என்று அழைக்கின்றனர். அமெரிக்காவில் தற்பொழுது பனிக்காலம் நிலவுவதால் இப்பெயரை கொண்டு அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இன்று காணப்படும் நிலவானது 15 முதல் 30 சதவீதம் வரை பெரிதாக தெரியுமாம்.

சூப்பர் மூன் என்றால் என்ன?

நிலவானது இன்று பூமியின் வெளிமட்ட பாதையான பெரிகிக்கு (Perigee) மிகவும் அருகில் வரும். அப்பொழுது வலக்கத்திற்கு மாறாக நிலா பெரிதாகவும் வெளிச்சமாகவும் தெரியும். இதனையே சூப்பர் மூன் என்று சொல்கின்றனர்.

எங்கு எங்கிருந்து காணலாம்?

இந்த நிலாவை பூமியில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் காணமுடியும். குறிப்பாக இந்தியாவில் அனைத்து நகரங்களில் இருந்தும் காணமுடியும். இன்று மாலை 9.30 மணியளவில் சூப்பர் ஸ்நொவ் மூனை வெறும் கண்களால் காணலாம்.

அதேப்போல், காலையில் நிலவு மறையும் போது அதன் தோற்றம் மிகவும் அழகானதாக இருக்குமாம்.

செய்தியை பகிர

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன